Friday, September 23, 2011

மௌனம்

en_pakkam_image1

மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்...mounam


மௌனம் மட்டுமே மிஞ்சும் நிமிடங்கள்,
அனுபவ சித்திரத்தை வடிக்கும் துகள்கள்


அனுபவத்திலும் பொருள் இல்லை யென்றாலும்

கற்றவை நிற்குமெனின், உன்னால் பிறர்க்கும்

அவரால் உனக்கும், கலக்கம் குறையும்......

நட்பா? காதலா?

en_pakkam_image1

நட்பா? காதலா?

நட்பா? காதலா?

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?
நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்
.

ராசபிரபாகரன்

விரும்பிய காதலும்...இனிய இதயமும்



அரும்பிய காதலும்….விரும்பிய இதயமும


உள்ளங்கையில்
உன் ரோஜாவினை வைத்திருப்பாள்
உதட்டுச்சாயம் எப்பொழுதும்
உனக்கும்
உன் ரோஜாவுக்கு மட்டும் என்பாள்....

நீ
பார்க்காது திரும்பினால் வருந்துவாள்
பார்வையாலே
உன்னை
அருந்துவாள்


அவள்
உன்னை
கண்களால் கட்டிப்போட்டவள்
இமைகளால்
இறுக்கிப்பூட்டியவள்
உன் பேரப்பிள்ளைகளுக்கு
பாட்டி அவள்...................


பல நாள் பார்க்காத
பாச தேவதையை-ஒரு நாள்
பரிசத்துடன்
பார்க்கையில் கண்களை
படபடக்கச் செய்வாள்
பாட்டாம் பூச்சியாய் உன்னை
பறக்கச் செய்வாள்...................


நீ
சொன்னால்
வானவில்லின் நிறம்
எட்டு என்பாள்
பழனிக் கோயில்
பிரசாதம்
லட்டு என்பாள்..................



உன்னையே
அவள் மனது
அத்தான் என
சொல்லும்
உன்
சட்டையில்
உதிர்ந்த பொத்தான் கூட
அவள் கையில்
காதல் சொல்லித் துள்ளும்



வகுப்பு அறையில்
விக்கல் எடுத்தால்
தண்ணிர் குவளை
உன்னைத்தேடிவரும்.......

வாழ்க்கையிலே
சிக்கல் இருந்தால்
அவளை நினைத்தால்
அதுவும் ஓடிவிடும்


காலங்கள் ஓடும்
கல்யாண பத்திரிக்கையுடன்
வருவாள்............
அத்துடன்
என்
கல்லறைகு செல்லும்
முகவரியைத் தருவாள்

முதல் முத்தம்







முத்தம்


பெண் எனும் மலரில்
ஆண் எனும் வண்டு
தேன் குடிக்க
கொடுக்கும்
நுழைவுச்சீட்டு


காதல்

உன்
கரம் பற்றி
கடற்கரை மணலில்
காலாற நடக்க
ஆசைதான்
ஆனால்
ஏனோ
ஒத்துழைக்க மறுக்கின்றன....
எனது போலியோ கால்கள்

ராசபிரபாகரன்

காதல் கவிதைகள்,

ரணமளிப்பவள்
நீ
என்பதால்.........
உயிர் வலிக்கும்
பொழுதெல்லாம்
சிரித்துக்கொள்கிறேன்.
...............................

நமது சந்திப்புகள்
காலி தேனீர் கோப்பைகளோடு
கவலைகளை வைத்துவிட்டு
மனசு முழுக்க
காதலை நிரப்பிக்கொண்டு
நிறைவடைகின்றன
................................
யாரிடமும்
இரகசியம் பேச
பிடிக்காத
உனக்குள் தான்....
இரகசியமாய்
வளர்ந்து கொண்டு இருக்கிறது
என் காதல்
.................................

எந்த விளையாட்டும்
விளையாடத் தெரியாத
உனக்கு
காதல் விளையாட்டை
அறிமுகப்படுத்தவே
நான்
பிறந்திருக்கிறேன்.

Tuesday, December 8, 2009